மாகாண சபை உறுப்பினர்
தவத்தின் மற்றுமொறு மக்கள் பணி
அக்கரைப்பற்று
பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆலிம் நகர் பிரதேசத்திலுள்ள மக்கள் கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களிடம் விடுத்த கொரிக்கைக்கு அமைவாக பல வேலைத்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்து அத் திட்டங்களுக்குறிய நிதிகளையும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இப்
பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள சுகாதார நிலையம்,மையவாடி அபிவிருத்தி தொடர்பான
களவிஜயம் இன்று (22) மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கல்முனைப்
பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்
ஏ.எல். அலாவுதீன், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,
அக்கரைப்பற்றுப் பிரதேச சபை செயலாளர்
ஏ.எல்.சலாஹுதீன்,
ஆலிம் நகர் ஜும்ஆ பள்ளிவாயல்
தலைவர் சகோ. ஜெமில் உட்பட
அதிகாரிகளும்
பொது மக்களும் கலந்து கொண்டனர்