News Update :

Friday, August 4, 2017

TamilLetter

அமைச்சர் ரிஷாட்டை விட ஹக்கீம் எவ்வளவோ பரவாயில்லை - அதாஉல்லா



முனாஸ்
அமைச்சர் ரிஷாட் பதியூதினோடு இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதை விட சும்மா இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளதாக அவரின் கட்சியைச் சேர்ந்த ; முக்கிய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனோடு இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்கும் முகமாக தன்னை நேரில் சந்திக்கும் ஆதரவாளர்களிடம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இப்படி கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கிமை பழிவாங்கும் ஒரே குறிக்கோளுடன் மட்டும் திட்டங்களை வடிவமைத்து முஸ்லிம் கூட்டமைப்பை உறுவாக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றனர்.இது விடயமாகவே என்னோடு பேசுகின்றனர்.நான் 17 வருடமாக கூறி வந்த விடயத்தை இன்று இவர்கள் என்னிடம் வந்து கூறுகின்றனர்.அத்தோடு கிழக்கு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் கிழக்கில் உள்ள தலைவர்கள் நாம் ஒன்று கூடுவோம் இதன் மூலமே கிழக்கில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழலாம்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் அமைச்சர் ஹக்கீமும்; ஒரே மாதிரியானவர்களே அதைவிட இதுவும் இதைவிட அதுவும் கொண்ட   ஒத்த நோக்கமுடையவர்கள் என கூறியதாக தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-