News Update :

Friday, August 11, 2017

TamilLetter

விஜேதாசவை பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை


நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் குறித்த தீர்மானத்தை எடுத்தி கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான முடிவை விமர்சித்து அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, இவரது அமைச்சின் கீழ் உள்ள சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுக்கும் முன்னைய அரசாங்கத்திற்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளை இழுத்தடிக்கின்றமை, ரவி கருணாநாயக்க விடயத்தில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டவாளர் நடந்து கொண்ட முறைமை போன்ற விடயங்கள் தொடர்பாக விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளிவிவார அமைச்சர் பதவியிலிருந்து, ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்த பின்னர், பிரதமரை சந்தித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்க வேண்டுமென என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருண, ஹெக்டர் அப்புகாமி, அசோக பிரியந்த, சாந்த அபேசேகர, சந்திப சமரசிங்க, சமிந்த விஜயசிங்க, கவிந்த ஜெயவர்த்தன, துசித ஜெயமான போன்றவர்களும் விஜேதாச ராஜபக்ச குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அவரை பதவி நீக்க வேண்டுமெனவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், விஜேதாச ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் அடுத்த வாரம் கோரிக்கை விடுப்பார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-