News Update :

Tuesday, August 8, 2017

TamilLetter

குவைட்டில் மரண தண்டனையில் தப்பிய இரு இலங்கையர்கள்!




குவைட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமன்னிப்புடன் காப்பாற்றி இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைட்டில் மற்றுமொரு இலங்கையரை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் ஒருவரும், போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 43 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்டஈட்டை வழங்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குவைட் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மற்றையப் பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகளை குவைட் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-