News Update :

Sunday, August 13, 2017

TamilLetter

அட்டாளைச்சேனையில் விபத்து ஒருவர் பலி



அட்டாளைச்சேனையில் விபத்து ஒருவர் பலி


அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் பாலமுனையைச் சேர்ந்த சக்காப் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தை நோக்கி வந்த பிக்கப் வாகனம் இவர் பயணம் செய்த தவிச்சக்கர வண்டியில் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டது.
விபத்து நடைபெற்ற போது குறித்த வாகனத்தை அதன் சாரதி நிறுத்தாமல் தப்பி சென்ற போது  துவிச்சக்கரவண்டியை நீண்ட துாரம் இழுத்துக் கொண்டு சென்றுள்ளதாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
 






TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-