News Update :

Tuesday, August 1, 2017

TamilLetter

உதுமாலெப்பைக்கு வெட்டு அன்ஸிலுக்கு வாய்ப்பு?

உதுமாலெப்பைக்கு வெட்டு அன்ஸிலுக்கு வாய்ப்பு?


நுாறுல் பர்ஷாட்

தீகபாவி சிங்கள வாக்குகள் பாலமுனை வாக்குகள்,ஒலுவில் வாக்குகளை எல்லாம்  தனது வாக்குகளாக கூறுவதன் மூலம்  அட்டாளைச்சேனையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என தேசிய காங்கிரஸின் இரண்டாம் நிலை தலைவர்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனா்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தை விட அதிகமான வாக்குகளை கடந்த தேர்தலில் சம்மாந்துறை மக்கள் அளித்த போதும் அவர்களுக்கு   நியாயமாக கிடைக்க வேண்டிய மாகாண அமைச்சை வழங்காமல் இரண்டு தடவை உதுமாலெப்பைக்கு வழங்கியதன் விளைவாகவே தேசிய காங்கிரஸின் வாக்குகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பக்கம் செல்ல காரணமாக அமைந்தது.

இரண்டு தடவைகள் அமைச்சு மற்றும் தலைவர் அதாஉல்லாவின்  அமைச்சின் மூலம் பல மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட நிலையிலும் அட்டாளைச்சேனையின் வாக்கு வங்கியை உதுமாலெப்பையால் அதிகரிக்க முடியாமல் போனதற்கான மாயம் என்ன?.

கடந்த இரு மாகாண சபை தேர்தலிலும் அக்கரைப்பற்றில் வேட்பாளர்களை நிறுத்தாமல் அக்கரைப்பற்றின் அதிகமான வாக்குகளை அட்டாளைச்சேனை உதுமாலெப்பைக்கு வழங்கிய போதும் அட்டாளைச்சேனை மக்கள் உதுமாலெப்பைக்கு சுமார் 1500  வாக்ககுகளுக்கு குறைவாகவே அளித்திருந்தனர் என்பது கவலையான விடயமாக பார்க்கப்படுகிறது.

இதே வேளை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்று அக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதுடன் அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பைக்கு பதிலாக முன்னாள் தவிசாளர் பாலமுனை அன்ஸிலை போட்டியிட வைப்பதன் மூலம் பலமான ஆதரவை பெற முடியுமென அக்கரைப்பற்று ஆதரவாளர்கள் நினைக்கின்றனர்.அத்தோடு மூன்றாவது வேட்பாளராக சம்மந்துறையை தேர்ந்தெடுப்பதும்  சிறப்பாக  அமையுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருவதை  உதுமாலெப்பை விரும்பவில்லையெனவும் ஹஸனலி தரப்பினரின் கூட்டமைப்போடு இணங்கி போவதையே அவர் விரும்புகிறார்.எனவே இவரை தொடர்ந்து நம்புவது கட்சியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பேசப்பட்டுள்ளது.

அதாஉல்லா மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட தயாராகினால் உதுமாலெப்பை ரிஷாட் அணியில் பாய்வதற்கான சந்தர்ப்பமும் இல்லாமல் இல்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-