News Update :

Monday, August 28, 2017

TamilLetter

தவத்தின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை மக்கள்

தவத்தின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட அட்டாளைச்சேனை மக்கள்

அட்டாளைசசேனை எம்.எம்.அஸ்கர்

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அட்டாளைச்சேனை மக்களை மிகவும் கிழ்த்தரமான முறையில் விமர்சித்ததற்கு அக்கரைப்பற்று மக்கள் சார்பாக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.

சென்ற கிழமை அட்டாளைச்சேனையில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து அட்டாளைச்சேனையின் கௌரவமிக்க கல்விமான்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டித்
தீர்த்தார் அதாஉல்லா.

அதாஉல்லாவின் இந்த நாகரிகமற்ற பேச்சினால் அக்கரைப்பற்று மக்களையும் அதாஉல்லா போன்றே அட்டாளைச்சேனை மக்கள் நினைத்து விடக் கூடாது ; என்ற பயத்தினால் அம் மக்கள் மத்தியில் பெரும் மனதோடு அக்கரைப்பற்று சார்பாக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.

மாகாண சபை உறுப்பினர் ;தவம் நேர்மையாக மக்களிடம் மன்னிப்பு கோரியதற்கு அட்டாளைச்சேனை மக்கள் தமது பலத்த கரகோசத்தால் தவம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மாகாண சபை உறுப்பினர் தவமின் இச் செயல் பலரையும் வியப்புக்குள்ளாகியதோடு நீண்ட நேரம் உரையாற்றுமாறும் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அன்புக் கட்டளையிட்டு குரலெழுப்பினர்.

மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஏற்பாட்டுக்குழு தவத்தை இன்னும் சில நேரங்கள் உரையாற்றுமாறு பணித்தனர்.இதன் பிரகாரம் சுமார் 57 நிமிடங்கள் தவம் கட்சியின் போராளிகளுக்காக உரையாற்றினார்.

அத்தோடு கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை தவத்தின் பேச்சின் மூலம் வழங்கியுள்ளார் என்று கூறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-