News Update :

Friday, August 4, 2017

TamilLetter

முஸ்லிம் மாணவிகள் எமது உயிர் – பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை – ஏ.எல்.தவம்


முஸ்லிம் மாணவிகள் எமது உயிர் – பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை – ஏ.எல்.தவம்

ஏ.எல்.றமீஸ்
கல்விப் பொதுத் தராதர உயர்தர  பரிட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படாதவாறு இஸ்லாமிய  கலாசார  சீருடையுடன் தேர்வு எழுதுவதுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஜனாதிபதி பிரதமர் மற்றும் கல்வியமைச்சருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

மாகாண சபை உறுப்பினர் தவம் இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் பல்கலைக் கழகத்திற்கு போவதற்கான ஒரு போட்டிப் பரீட்சையாக  இதை கருதாமல் பரீட்சை எழுதும் மாணவி தொடக்கம் குடும்பம் சமூதாயம் என பலபேரின் எதிர்காலம் இப் பரிட்சையில் தொடர்புபட்டுள்ளது
 

க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 8-ஆம் தேதி தொடக்கம் செப்டம்பர் 2-ஆம் திகதி வரை சுமார் ஒரு மாத காலம்  நடைபெறுவதனால் அரசாங்கம்  இதில் உரிய கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது..
கடந்த முறை நடைபெற்ற கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண பரீட்சையில் தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாட்டில் பல இடங்களில் இடம் பெற்றது.

 

பரிட்சை எழுதும் மாணவியின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு எவ்வளவு வழிமுறைகள் இருந்த போதும் வேண்டுமென்றே மாணவிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் முறையில் ஹிஜாப் மற்றும் பர்தாவை கழற்ற வேண்டுமென்று  பரீட்சை  மேற்பார்வையாளர்கள்  விடாப்பிடியாக நடந்து கொண்ட விதம் கண்டிக்கதக்கது.
 

முஸ்லிம் மாணவிகள் உயிரைவிட மானத்தையே பெரிதாக மதிப்பவர்கள் அப்படியிருக்கும் போது தன் மானத்தை தொலைத்து விட்டு எப்படி அவர்கள் சுயமான சிந்தனையுடன் பரீட்சை எழுத முடியும்.
எனவே உயர்தர பரீட்சை எழதும் முஸ்லிம் மாணவிகளுக்கு எந்தவித சங்கடங்களையும் பரீட்சை நிலையங்களிலும் சரி அதற்கு வெளியிலும் ஏற்படாதவாறு  பாதுகாப்பு வழங்கக் கூடிய முழுப் பொறுப்பும்  பரீட்சை திணைக்களத்தினதும் அரசாங்கத்தினதும் கடமையென நான் நம்புகின்றேன்.

 

ஆகவே தேசத்தின் அமைதிக்காக எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-