கடலில் மூழ்கி ஐந்து மாணவர்கள் பலி!
கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற போது குறித்த விபத்து ஏற்றட்டுள்ளதாகவும் இதில் உயிரிழந்த மாணவர்கள் அனைவரும், இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிரப்பவர்கள் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குறித்த விபத்தில் பலியானவர்களின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்து என்றும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட றஜீவ்,
பிரவீன், தனுரதன், தனுசன் மற்றும் செல்வின் ஆகியோர் நீரிழ் மூழ்கி
உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
நல்லூர், கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என
தெரிவிக்கப்படுகின்றது.