News Update :

Thursday, August 17, 2017

TamilLetter

எத்தனை முட்டை சாப்பிடலாம்?




தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம்.

முழுக்க முழுக்க புரதம் நிறைந்த ஒரே உணவுப்பொருள் முட்டை. அந்த அளவுக்கு புரதமும் அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கின்றன.
ஒரு முழு முட்டையில் ஆறு கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாம் மஞ்சள் கருவை சாப்பிடவில்லையென்றால் வெறும் மூன்று கிராம் அளவு புரதம் மட்டுமே கிடைக்கும்.

மஞ்சள் கரு கொலஸ்ட்ரால் நிறைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நமக்குத் தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்களான குளோனின், செலீனியம், ஜிங்க், வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே ஆகியவை நிறைந்திருப்பது முட்டையின் மஞ்சள் கருவில் தான்.

 மட்டும் சாப்பிடுபவர்கள் இரண்டு முட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. ஆனால், மஞ்சள் கருவுடன் சேர்த்தே, சராசரியாக இரண்டு முட்டை எடுத்துக் கொள்ளலம்.
மிகவும் சுறுசுறுப்பான, அதிக அளவு உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் நான்கு முதல் ஐந்து முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் கருவையும் சேர்த்து.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-