அட்டாளைச்சேனையில் அதாஉல்லாவின் அசிங்கம் - அக்கரைப்பற்று இளைஞர் ஒருங்கிணைப்பாளர்
நாகரிகமான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இளைஞர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது மீண்டும் தனது அசிங்கங்களை மேடையேற்றியுள்ளார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா என அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் என்.ரீ.அஸ்மத் தெரிவித்தார்.
பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம் பெற்ற அரசியல் விழிப்புணர்வு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அஸ்மத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அக்கரைப்பற்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒர் பிரதேசம். கல்வியாளர்களை சுமந்த மண் அப்படிப்பட்ட இந்த மண்ணிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு சென்று பொதுக் கூட்டத்தை கூட்டி பல பேருக்கு தூசன வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா.
கடந்த காலங்களில் தனது அரசியலுக்காக கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சாராயத்தை கொடுத்து மாற்றுக் கருத்துடையவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் தனது அட்டகாசத்தை அக்கரைப்பற்று மண்ணில் அரங்கேற்றினார்.இதன் விளைவுதான் இளைஞர்களும் மாணவர்களும் நீதிமன்றங்களிலும்,பொலிஸ் நிலையத்திலும் வருடக்கணக்கில் காலத்தை கழிக்க வேண்டியேற்பட்டது.
அப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைவனுக்கு ஏற்பட்ட தோல்வி இன்னும் அவனை பன்மடங்கு அநாகரிகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளதை அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற கூட்டத்தில் நாம் காணக் கூடியதாக இருந்தது.
எனவே இப்படியான அரசியல்வாதிகளை எமது சமூகம் அங்கிகரிக்கும் போது நமது பிள்ளைகளை தீவிரவாதிகளாக மாற்றுவதோடு பொலிஸ் நிலையங்களில் பெற்றோர்கள் கைகட்டி நிற்க வேண்டிய சூழல் நம்மை வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.