ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் தொடர்பில் இடம்பெற்ற விவாதம் காரணமாக நாடாளுமன்றில் சூடான நிலை ஏற்பட்டது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் இந்நிலை ஏற்பட்டது.
இறுதியில் இது தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன யோசனையை முன்வைத்தார்.
அதனையடுத்து, வாக்கெடுப்பு ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பில் வாக்கெடுப்பு யோசனைக்கு ஆதரவாக 43 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் கிடைக்கபெற்றன.
கிராம அதிகாரி, சமூர்த்தி அதிகாரிகள் ஆகிய கள அலுவலகர்களுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராக பங்குப்பற்ற முடியாது என, குறித்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன கூறினார்.
அதனையடுத்து, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக இலத்திரனியல் முறை வாக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது.
இதனையடுத்து. சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்ப நடத்த சபாநாயகர் தீர்மானித்தார்.
அதன்படி இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.