News Update :

Thursday, August 24, 2017

TamilLetter

வாக்கெடுப்பை புறக்கணிக்க நேரிடும் - பாராளுமன்றத்தில் ரவுப் ஹக்கிம் அரசுக்கு எச்சரிக்கை



வாக்கெடுப்பை புறக்கணிக்க நேரிடும் -  பாராளுமன்றத்தில் ரவுப் ஹக்கிம்  அரசுக்கு எச்சரிக்கை


சிறுபான்மை பிரதிநிதித்துவம் பற்றிய முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படுவது தொடர்பில் சாதகமான உத்தரவாதமொன்றை பிரதமரினாலோ அல்லது மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சரினாலோ வழங்கப்படாத பட்சத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச சட்ட மூலத்தின் மீதான வாக்கெடுப்பில் குறைந்த பட்சம் கலந்து கொள்ளாமலாவது இருக்க வேண்டிவரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம் நேற்று சபையில் தெரிவித்தார்.

இந்த சட்டமூலமானது தற்போது குளறுபடிகள் உள்ள ஒன்றாக காணப்படுவதாகவும் அந்த வகையில் விடயத்துடன்  சம்மந்தப்பட்ட அமைச்சரிடம்  இருந்து சில உத்தரவாதங்கள் இல்லாவிட்டால் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திற்கு துரோகமிழைப்பதே அதன் பிரதிபலனாக அமைந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இதிலுள்ள குறைபாடுகள் பற்றி நாங்கள் சுட்டிக் காட்டியிருந்ததாகவும் அது தொடர்பில் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவை தொடர்பான திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றும அமைச்சர் ரவுப் ஹக்கிம் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஜே.பி.பி.தமிழ் கூட்டமைப்பு தலைவர்களும் உரையாற்றினர்
 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-