News Update :

Wednesday, August 16, 2017

TamilLetter

அமைச்சர் ரவூப் ஹக்கிமின் தந்திரம் - சிதறும் முஸ்லிம் கூட்டமைப்பு

அமைச்சர் ரவூப் ஹக்கிமின் தந்திரம் - சிதறும் முஸ்லிம் கூட்டமைப்பு
 

 குல்ஸான்
சான் ஏற முழம் சறுக்கும் என்பது போல் ஹஸனலி தரப்பின் சிறு சிறு நம்பிக்;கையை முஸ்லிம் காங்கிரின் தலைவரின் காய் நகர்த்தலால் சிதறுண்டு போகச் செய்கின்றது.
 

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு சிறு வாக்குகளை பிரிக்க முற்பட முயற்சிக்கும் ஹஸனலி தரப்பினர் மறுமுனையில் பாரிய வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் மறைமுகமாக மாற்றி வருகின்றனர். 
ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டு அமைத்து களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் கடைப்பிடித்து வெற்றி பெற்ற அதே யுக்தியை இத் தேர்தலிலும் கடைப்பிடிக்கின்றது.
 

அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில்,அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,நிந்தவூர்,இறக்காமம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு  வலயமும் கல்முனை,மருதமுனை,சாய்ந்தமருது,நற்பிட்டிமுனை,மத்திய முகாம்,சம்மாந்துறை ஆகிய பிரதேசங்கள் இன்னும் ஒரு வலயமாகவும் பிரிக்கப்பட்டு தலா மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்.
இதன் மூலம்   முஸ்லிம் காங்கிரஸில் போட்டி போடும் வேட்பாளர்கள் குறைந்த பட்சம் 35 ஆயிரம் வாக்குகளுக்கு அதிமான விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான சூழல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  ;;.
 

தற்போது மாகாண சபை உறுப்பினராகயிருக்கும் கல்முனை ஜவாத்,ஏ.எல்.தவம்,ஆரீப் சம்சுதீன் ஆகியோர் மீண்டும் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவர்,சுகாதார அமைச்சராக இருக்கும் ஏ.எல்.எம். நஸீர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவுள்ளதால் அவர் மாகாண சபை வேட்பாளர் பட்டியலிலிருந்து தவிர்ந்து கொள்கிறார்.
 

சம்மாந்துறை மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.மாஹீர் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கவிருக்கின்ற போனஸ் ஆசனத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார்.
 

அந்த வகையில் கல்முனை வலயத்தில் கல்முனை ஜவாத்தோடு சாய்ந்தமருதில் மாற்றுக் கட்சியில் இருக்கும் ஒருத்தருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.அதே போல் சம்மாந்துறை வேட்பாளராகவும் மாற்றுக் கட்சியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு நபர் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்தள்ளார்.இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.
 

புதிதாக இணைந்து கொள்ளும் இரண்டு புதிய வேட்பாளர்கள் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த போதும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான கூட்டில் இருந்ததால் மக்கள் இவர்களை கடந்த தேர்தல்களில் நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

குறிப்பிட்ட இந்த இரண்டு நபர்களும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரோடு உறவுகளை பேனி வருவததை ; ஹஸனலி தரப்பினர் மோப்பம் பிடித்துள்ளனர்.இருந்தும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து போட்டியிடுவதில் அவர்கள் உறுதியாகவுள்ளதால் முஸ்லிம் தலைவர்களை ஒன்றிணைக்கும் முஸ்லிம் கூட்டமைப்பு கேள்விக்குறியாகி விட்டது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-