புலிகளை விட அஸ்மின் மீதே இந்த நாளில் அதிக வெறுப்பாக இருக்கிறது..
காத்தான்குடி படுகொலை நடந்த இன்றைய நாளை நினைவு கூர்ந்து, புலிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதை விட, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வட மாகாண உறுப்பினர் அஸ்மினின் மீதான வெறுப்பே மிகைத்து நிற்கிறது.
பதவிகள், எப்படி நேர்மையான போராட்டங்களிலிருந்து தடம் மாறி,சொந்த மக்களையே விலை கேட்கும் என்பதை அண்மைக்காலமாக பலஸ்தீனில் அவதானித்து வந்தேன். அதில் ஒரு அங்கத்தையே அஸ்மினிலும் இன்று அவதானிக்கிறேன்.
புலிகள்தான் முஸ்லிம்களை காத்தான்குடி பள்ளிவாயலில் சுஜூதிலிருக்கும் போது சுட்டுக்கொன்றார்கள் என்ற விடயத்தில் எந்த முஸ்லிம் அரசியல் தலமைகளும் இரண்டாவது கருத்தை முன்வைத்ததில்லை. ஏன் தமிழ் அரசியல் / ஆயுதத் தலைமைகள் கூட மறுத்ததில்லை. அதனை மறப்போம்; மன்னிப்போம் என்றே கூறுகின்றனர்.
ஆனால், முதன்முதலில் அஸ்மின் மாத்திரமே மிக நூதனமாக மறுத்திருக்கிறார் அல்லது இருட்டடிப்புச் செய்ய முயற்சித்துள்ளார். தனது சொந்த மக்களின் இரத்தம் உறைந்த வரலாற்றை இவ்வளவு இலகுவாக அவரால் மறைக்க முடிந்தது எப்படி என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை.
இந்த நாளை "தேசிய ஸுஹதாக்கள் தினமாக" பிரகடனம் செய்வதில் முன்னின்று உழைத்தவர்கள் நாங்கள். தேசிய ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்திய நாளில் (2004 ஆகஸ்ட்), முஸ்லிம்கள் கொல்லப்பட
ட அதே மொஹிதீன் மஸ்ஜிதிற்கருகில் நடந்த பிரகடன மேடையில் உரையாற்றி விட்டு, காத்தான்குடிக்கு சென்ற வாகனத்தை மாற்றியே ஊருக்கு வர முடிந்தது. அப்படி புலிகளின் அச்சுறுத்தல் இருந்தது. புலிகள் சுதந்திரமாக நடமாடிய புரிந்துணர்வுக் காலமது.
அஸ்மின் அவை யாவற்றையும் மிக இலகுவாக மறந்து விட்டது கவலையளிக்கிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இலகுவில் விலை போவார்கள் என்பதை அஸ்மின் மீண்டும் நிரூபித்து விட்டதில் மனம் வேதனைப்படுகிறது. எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் போல நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் மாமூலான ஒன்றுதான் என்பதற்கு உதாரணம் கொடுத்திருக்கிறார்.
ஏலவே அவர் முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு கொடுக்கத் தேவை இல்லை என்று பேசிய போதே இடை நிறுத்தி இருக்க வேண்டும். இப்போது தலைக்கு மேலால் சென்று விட்டது என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
நானறிய அவர் அண்மைக்காலமாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் உறவு, அவரை இன்னும் என்னவென்னவெல்லாம் செய்யத் தூண்டும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது தெரிவே இவ்வாறு பிழைத்துப்போனதில் கட்சி பேதம் தாண்டி எனக்கு கவலை தருகிறது.
எனது பார்வையில் அஸ்மின் மன்னிக்க முடியாத ஒரு சமூக வடு