News Update :

Thursday, August 24, 2017

TamilLetter

கடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர



ரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதிக தகைமையாக பார்த்து அவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ட்ரவிஸ் சின்னையா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளத்தில் தவறுகள் எதுவும் கிடையாது. காரணம் கடற்படை தளபதியை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளிலேயே இருக்கின்றது.

ஜனாதிபதி இந்நாட்டின் முப்படை தளபதி என்ற வகையில் ஜனாதியினால் தெரிவு செய்யப்படுகின்றவரை ஜனாதிபதியாக நியமிக்கப்பட முடியும் என்றே அரசியலமைப்பிலும் கூறப்பட்டுள்ளது.

இவர் முன்னர் கடற்படையில் இருந்து விருப்பத்தின் பேரில் பதவி விலகியிருந்த நிலையில் மீண்டும் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகினார் என்பதை காரணம் காண்பித்தே மீண்டும் கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்பதில் சற்று சிக்கல் இருக்கின்றது.
இருப்பினும் கடற்படை அதிகாரி என்று பார்க்கையில் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதையும் அவரின் செயற்பாடுகள் சிறந்த மட்டத்திலேயே காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தில் பணியாற்றியவர் என்பதையும் காரணம் காண்பித்து அவர் மேற்படி பதவிக்கு பொருத்தமற்றவர் என்றும் கூற முடியாது.

காரணம் அமெரிக்க அரச திணைக்களத்தில் அவர் பணியாற்றியுள்மையும் அவரின் தகைமையாகவே பார்க்க வேண்டியது அவசியமாகும். எனவே அவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டது தவறானதல்ல.

அத்துடன் நாட்டின ஜனாதிபதி ஒருவர் முப்படை தளபதியாக இருக்கும் பட்சத்தில் அவரினால் சிவில் பிரஜை ஒருவரைக் கூட கடற்படை தளபதியாக நியமிக்கும் அதிகாரம் உள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-