News Update :

Monday, August 21, 2017

TamilLetter

அமெரிக்க போர்க் கப்பல்: விபத்து!


சிங்கப்பூர் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அமெரிக்காவின் முக்கிய போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ஜோன் மெக்காய்ன், இன்று அதிகாலை எண்ணெய் கொள்கலக் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்தனர். மேலும் அமெரிக்க கடற்படை வீரர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

லைபிரிய கொடியுடன் காணப்பட்ட அந்த எண்ணெய்க் கப்பலுடன் மோதிய அமெரிக்கப் போர்க் கப்பல், சற்று சேதமைடந்திருந்த போதிலும் தொடர்ந்து, சிங்கப்பூர் துறை முகத்தை நோக்கி பயணித்து வருவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, இந்தக் கப்பல் மோதலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களும் சிங்கப்பூர் கடலோர ரோந்து படையினரும் ஈடுப்பட்டிருப்பதாக, மலேசிய கடற்படையும் இந்தத் தேடும் பணியில் உதவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட எண்ணெய் கப்பலுக்கு எத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. விபத்து நடந்த போது அந்தக் கப்பலில் 30 ஆயிரம் டன் எண்ணெய் இருந்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஜூனில் அமெரிக்காவின் மற்றொரு போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஷ்ஜெரால்டு மற்றொரு கொள்கலக் கப்பலுடன் ஜப்பானின் கடற்பகுதியில் மோதிய சம்பவத்தில் 7 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-