News Update :

Wednesday, August 9, 2017

TamilLetter

ஒலுவிலில் சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை


ஒலுவில் நிருபர் அமீர்




ஒலுவில் பிரதேசத்தில் அட்டாளைச்சேனைசுகாதாரவைத்தியஅதிகாரியின் காரியாலத்தின் ஏற்பாட்டில் பொதுச் சுகாதாரபரிசோதகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதாரத்திற்கு சீர்கேடானபல இடங்களை சுற்றுவளைத்து சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒலுவில் பிரதேசத்திலுள்ள மீன் சந்தை, இறைச்சிக்கடை,தேனீர் கடைகள்,பேக்கரி,சில்லரைக்கடை,வீதியோரதற்காலிககடைகள்,கோழிக்கடைஆகியயெனஅட்டாளைச்சேனைசுகாதாரவைத்தியஅதிகாரிகாரியாலயைத்தைச் சேர்ந்தமேற்பார்வைபொதுச் சுகாதாரபரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக்,பொதுச் சுகாதாரபரிசோதகளர் எம்.எச். பைறூஸ் ஆகியோர்கள் திடீர் சுற்றுவளைப்பைமேற்கொண்டனர்.

இதில் வீதியோரங்களில் மீன் விற்பனைசெய்தோர் எச்சரிக்கை செய்யப்பட்டு மீன் சந்தைக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். தேனீர் கடைகளிலிருந்து கழிவுநீரை பிரதான வீதிக்கு வீசப்பட்டது இதை உடனடியாக நிறுத்தவேண்டுமென  தேனீர் கடைஉரிமையாளருக்கும் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுவிளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் பொதுச் சந்தையில் கூடியிருந்தபொதுமக்களுக்கு சுத்தமானமீன்,சுத்தமான இறைச்சி,சுத்தமானஉணவு வகைகள் எவ்வாறுபெறப்படவேண்டுமெனஅறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஒலுவில் நிருபர் அமீர் 0772984519

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-