இதேவேளை ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 40 வயதான நபரொருவரினதும் மற்றொரு ஆசிய நாட்டவரினதும் சடலங்கள் சுலைபிகாட்(Sulaibikhat) பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
மூச்சுத்திணறலினால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மரணங்களின் காரணத்தை தீர்மானிக்க வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.