News Update :

Thursday, August 10, 2017

TamilLetter

பிரதேச சபைக்கு போட்டி போடும் அட்டாளைச்சேனை வேட்பாளர்கள் - வெல்லப் போவது யார்?



பிரதேச சபைக்கு போட்டி போடும் அட்டாளைச்சேனை வேட்பாளர்கள் - வெல்லப் போவது யார்?


குல்ஸான்
 

உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால் அட்டாளைச்சேனை பிரதேச சபையை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பலர் களம் இறங்கியுள்ளனர்.
 

கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிருந்த சூழ்நிலையில் அக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்து மாற்று அணியின் பக்கம் இன்று சென்றுள்ளதால் எதிர்வரும் தேர்தல் பலத்த போட்டியாக பார்க்கப்படுகின்றது.
 

குறிப்பாக முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில்,ஐ.எல்.முனாப்,ஐ.எல்.நஸீர் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான கூட்டிலும் அதே போன்று வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீம் ஆப்தீன் அக்கட்சியை விட்டு பிரிந்து முஸ்லிம் காங்கிரஸின் பக்கமும் சேர்ந்துள்ளார்.அதே போன்று தேசிய காங்கிரஸில் போட்டியிட்ட ஹம்ஸா சனூஸ் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இதே வேளை தமிம் ஆப்தீன் போட்டியிடும் அரபா வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் இரண்டு பேரில் ஒருவருக்கே போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
 

ஒலுவில் பிரதேசத்தில் நிறுத்தப்படும் முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர்களை விட மக்கள் செல்வாக்குள்ள போட்டியாளர்களை தம் அணி சார்பாக களமிறக்கப்படுவதால் ஒலுவிலை தாம் கைப்பற்றுவதோடு பாலமுனையையும் இலகுவாக வெற்றி கொள்வோம்  மேலும் அட்டாளைச்சேனையின் ஐந்து வட்டாரங்களான ஒலுவில் இரண்டு வட்டாரங்கள்,பாலமுனை இரண்டு வட்டாரங்கள்,திகபாவி ஆகிய ஐந்து வட்டாரங்கள் இலகுவாக எம் பக்கம் வந்துள்ளதாக முன்னாள் தவிசாளர் கூறினார்.
 

மீதியாகவுள்ள அட்டாளைச்சேனையின் இரண்டு வட்டாரங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதுடன் தைக்கா நகர் வட்டாரத்தில் நிறுத்தப்படும் வேட்பாளரை பொறுத்து எமது வெற்றி நிர்ணயிக்கப்படும் என முன்னாள் உறுப்பினர் ஒருத்தர் தெரிவித்தார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-