News Update :

Sunday, August 13, 2017

TamilLetter

கூட்டணி அரசாங்கத்தில் பிளவு! பிரிந்து செல்கின்றது ஐ.தே.கட்சி?


கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான அரசொன்றை நிறுவ கட்சி தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் நீடிக்குமானால், பதவி துறக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியி சில அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் கூறியதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-