News Update :

Thursday, August 24, 2017

TamilLetter

மட்டக்களப்பிலும் அம்பாறையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, மட்டக்களப்பு, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-