தோல்வி பல நல்ல பாடங்களை கற்றுக் கொடுக்கின்றது ஆனால் சில பேருக்கு அது அநாகரிகங்களையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது அதாஉல்லாவின் அண்மைக்கால செயற்பாட்டின் மூலம் புலனாகின்றது.
அக்கரைப்பற்று மக்களால் துரத்தப்பட்ட அதாஉல்லாவிற்கு அடைக்களம் கொடுத்த மண் அட்டாளைச்சேனை.இம் மக்களின் வாக்குகளையும் வியர்வைகளையும் பெற்றுக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மறுகனமே அம் மண்ணிற்கு துரோகமிழைத்த வரலாறு யாராலும் மறக்க முடியாதது.
அதாஉல்லா எனும் சமூக துரோகி மீண்டும் எம் மண்ணுக்கு வந்து எமது கௌரவமிக்கவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்
அதாஉல்லாவால் காயப்பட்ட எமது மக்களுக்கு அதே மண்ணிலிருந்து வந்த தவம் ஒத்தடம் போட்டு ஆற்றுப்படுத்தியது எங்களுக்கு ஒரு ஆறுதலான விசயம்.
மாகாண உறுப்பினர் தவம் அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்கள் இதற்கு முன்பிருந்த அக்கரைப்பற்று அரசியல் வாதிகளை விடவும் தேசிய ரீதியில் கவரக்கூடிய அளவுக்கு பேச்சாற்றல் மிக்கவராகவும்,சமூகப்பற்றுள்ளவராகவும்,பிரதேச வாதங்கள் கடந்தவராகவும் காணப்படுவதால் தவத்தின் அரசியல் உயர்வை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. என்பதை அடுத்துவரும் தேர்தலில் மக்கள் உணர்த்துவர்
எமது மண் சமூக நீரோட்டத்தின்பால் அணிதிரளுமே தவிர சில மாயஜாலங்களுக்கு விலை போகாது என்பதை அதாஉல்லா பல முறை விளங்கியிருப்பார் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியின் கொடியை நேர்மையாக தாங்கி பிடித்துள்ளார் மாகாண சபை உறுப்பினர் தவம்.முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் தவத்தை பிரதேசம் தாண்டி பார்க்கின்றனர்.ஒரு பாத்திரத்துக்குள் அடைபட்டுக்கிடக்கும் அதாஉல்லா போன்ற அரசியல்வாதியல்ல தவம்.
இடைநடுவில் சலசலப்புக்களை எற்படுத்துவதன் மூலம் வெற்றியடையலாம் என்று அதாஉல்லா கணக்கு போட்டுள்ளார். வாக்குச்சாவடி வரைக்கும்தான் இந்த சலசலப்பெல்லாம் என்பது கடந்த வரலாறு உங்களுக்கு பாடம் புகட்டியிருக்கும்.
அந்த வரலாற்றுப் பதிவில்; இன்னும்மொறு தடவை உங்களின் தோல்வி அடுத்த தேர்தலில் மக்களால் எழுதப்படும் அதுவரை பொறுத்திருங்கள்.