News Update :

Sunday, August 20, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?



கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?



முழுசாக வாசித்து பின்னர் - ஒரே சொல்லில் விடை எழுதுக (ONE WORD ANSWER) …………………

1. இனவாதிகளால் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது ரசூல் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் பள்ளிகள் உடைக்கப்பட்டன. அதனால் அது ஒரு பொருட்டல்ல என்று கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

2. பேருவல - அழுத்கமவில் முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் கொல்லப்பட்டதையும், சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும் நேரடியாகச் சென்று பார்த்து வந்து, இது ஒரு சர்வதேச சதியென்று பாராளுமன்றத்தில் உரையாற்றி, கொலைகாரர்களையும் அக்கிரமக்காரர்களையும் காப்பாற்றிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

3. பர்தாக்களும் அபாயாக்களும் அணியக்கூடாது என்று இனவாதிகள் கூறிய போது, நமது முன்னோர்கள் என்ன அபாயாக்களும் பர்தாக்களுமா போட்டார்கள்? பார்தாகளும் அபாயாக்களும் போடுவதை நிறுத்தி சாரி கட்டலாம்தானே என்று கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

4. தம்புள்ளை பள்ளிவாயல் உடைக்கப்பட்டுக் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டு, மிம்பரில் பௌத்த தர்மச்சக்கரம் ஏற்றப்பட்ட போது, இரண்டு தகட்டினைக் கழற்றினால் பள்ளிவாயல் உடைக்கப்பட்ட என்று அர்த்தமா எனக்கேட்ட அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

5. நமது மதரசாக்கள் இழுத்து மூடப்பட்ட போது, கடந்த காலங்களில் வீடுகளில்தானே ஓதிக்கொடுத்தார்கள். இப்போதும் அதனைச் செய்யலாம்தானே?. மதரசாக்களுக்கென்று பிரத்தியேக இடங்கள் இல்லாமல் போனால் நமக்கென்ன என்று கேட்ட அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

6. ஹலால் உணவின் மீது இனவாதிகள் நெருக்குவாரம் தந்த போது, ஹலால் உணவை நாம் தேடிச் சாப்பிட்டால் என்ன குறைந்தா போய்விடுவோம்? ஹலால் சான்றிதழ் தேவையற்ற ஒன்று என்று கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

7. கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது, கொழும்பிலும் கண்டியிலும் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டால் நமக்கென்ன? அம்பாறையில் அல்லது அக்கரைப்பற்றில் தாக்கப்பட்டால் வந்து சொல்லுங்கள் அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

8. கிறிஸ்மேன் பிரச்சினை வந்த போது அக்கரைப்பற்றுப் பட்டின ஜும்ஆ பள்ளிவாயலுக்குள் நடந்த கூட்டத்தில், கிறிஸ்மேன் என்று ஒன்றில்லை, அது நமது பெண்களிடம் இரவில் கள்ளத்தனமாக சென்று வரும் ஆண்களே என்று கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

9. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மகிந்தவிற்குப் பாடம் கற்பிக்க எதிர்த்து நின்ற போதும், முஸ்லிம்கள் மகிந்தவிற்கு வாக்களிப்பது பர்ளு ஐன் என்று கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?

10. நான் மகிந்தவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நீங்கள் எல்லோரும் மகிந்தவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கரைப்பற்றில் கூறிய அம்பாறை மாவட்ட அரசியல்வாதி யார்?
போட்டி நிபந்தனைகள்:-

1. இதில் சிந்திக்கக் கூடியவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
2. ஒரு சொல்லிலேயே பதிலளிக்க வேண்டும்.
3. கீழே COMMENT இல் பதிலளிக்கலாம்.
4. 10 கேள்விகளில் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 10 புள்ளியுண்டு.
5. 10 கேள்விகளுக்கும் சரியான விடையளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
(பகுதி – 01 / PART – 01 முற்றுப்பெற்றது)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-