News Update :

Friday, August 11, 2017

TamilLetter

ரியா மசூர்,போராளி சுபியான் அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர்கள்

ரியா மசூர்,போராளி சுபியான் அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர்கள்


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் புதல்வர் ரியா மசூர், கட்சியின் மூத்த போராளியும் சமூக சேவையாளருமாகிய போராளி சுபியான்; ஆகிய இருவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத்  தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ரியா மசூர் அட்டாளைச்சேனை 11வது பிரிவிலும் போராளி சுபியான் அரபா வட்டாரத்தையும்; பிரதிநிதித்துவப்படுத்தி களமிறக்கப்படவுள்ளனர்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அதில் அங்கம் வகித்த அதாஉல்லா,உதுமாலெப்பை ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கொண்ட மசூர் சின்னலெப்பை கட்சியையும்,கட்சிப் போராளிகளையும் மீட்டெடுத்த வரலாறுகளை இன்னும் அட்டாளைச்சேனை மக்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.

இக் காலகட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட மர்ஹூம் மசூர் சின்னலெப்பை அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதணை படைத்ததோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் அப்படிப்பட்ட ஒரு தலைமையை அட்டாளைச்சேனை பிரதேசம்  இன்று இழந்து நின்கின்றது.இதற்கு பரிகாரம் தேடும் முகமாகவே அவரின் புதல்வர் ரியா மசூருக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கட்சி வழங்கியுள்ளதென கட்சியின் முக்கியஸ்தர் ஒருத்தர் தெரிவித்தார்.

அதே போன்று கட்சிக்காக பல்வேறு இன்னல்களைத் தாங்கி தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் எதிரணியினரின் தாக்குதல்கள்,வழக்குகள் என இன்று வரை தொடர்ச்சியான போராட்டங்களை சந்தித்து வரும் கட்சியின் மூத்த போராளி சுபியானுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டியது கட்சியின் கடமை என்று கூறப்படுகின்றது.

எது எப்படியோ இம் முறை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பல முனைகளிலிருந்தும் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-