காகம் சும்மா கரையாது; கத்திக் கத்தி அலையாது ...தவம் ஸுவாத்தி
மரத்தினில் இருப்பதால் -காகம்
மலைகளைத் தாண்டாதென்றில்லை
அது பறக்கையில் வந்த - தாகம்
பனியினால் தீராத யாகம்
பரிவுகள் தேவையில்லை
பரிதாபம் வேண்டுமென்றுமில்லை
கரைவதைப் புரிந்தால் போதும்
அதன் கடமையும் முடிந்தே போகும்
இறக்கைகள் பிடுங்கிட
இரக்கமே இல்லை என்றாக
இனி
இறக்கவும் தயாரான – காகம்
இறங்குமா அதல பாதாளம்
அதனை விடு
ஆபத்தைப் புரிந்து கொள்
கசடுகள் தீர்க்க
உன் கயமைகள் போக்க
காகத்தைத் துரத்தாதே
காகம் அழுக்கை நீங்கி
அவையிலேயே கரைகிறது
அதனைப் புரிந்து கொள்
காகம் கரைந்தால்
கனத்த குரலில் கரைந்திட
காகங்கள் கோடியுண்டு
கவனமாய்ப் புரிந்து கொள்
நகங்களை நீட்டி
நல்லா நிமிர்த்தி
கோடு கீறுதே காகம்
நம் கூடு மிக்க கவனம்
காகத்தில் தவறில்லை
கா கா தவிர
அதற்கு வேறு மொழி இல்லை
வேதத்தைத் தந்தவன்
வேறு எதையும் கொடுக்கவில்லை
கா கா வெனவே கரைகிறது
கருத்தினை நீயே புரிந்து கொள்
சுள்ளிகள் பொறுக்கி
சுவர் செய்து
வீடு கட்டி
புள்ளிகள் போடுதே - காகம்
புரிந்து கொள்
அதுதான் உன் ஞானம்
பாட்டன்களை வரச் சொல்லி
பெரும் பட்டிமன்றமே நடத்தச் சொல்லு
காக வரியில் கதையெல்லாம்
சொல்லச் சொல்லு
காகம் சும்மா கரையாது
கத்திக் கத்தி அலையாது
நோக்கம் ஒன்றிருக்கும்
நீ - நோகுமுன்னே தெரிந்து கொள்
(கரையாமல் கரைந்த காகத்திற்கு புரியாமல் புரிந்து கவிதை எழுதிய – பாட்டுப் பாடிய நண்பர்களுக்கு)
17.08.2017
பனியினால் தீராத யாகம்
பரிவுகள் தேவையில்லை
பரிதாபம் வேண்டுமென்றுமில்லை
கரைவதைப் புரிந்தால் போதும்
அதன் கடமையும் முடிந்தே போகும்
இறக்கைகள் பிடுங்கிட
இரக்கமே இல்லை என்றாக
இனி
இறக்கவும் தயாரான – காகம்
இறங்குமா அதல பாதாளம்
அதனை விடு
ஆபத்தைப் புரிந்து கொள்
கசடுகள் தீர்க்க
உன் கயமைகள் போக்க
காகத்தைத் துரத்தாதே
காகம் அழுக்கை நீங்கி
அவையிலேயே கரைகிறது
அதனைப் புரிந்து கொள்
காகம் கரைந்தால்
கனத்த குரலில் கரைந்திட
காகங்கள் கோடியுண்டு
கவனமாய்ப் புரிந்து கொள்
நகங்களை நீட்டி
நல்லா நிமிர்த்தி
கோடு கீறுதே காகம்
நம் கூடு மிக்க கவனம்
காகத்தில் தவறில்லை
கா கா தவிர
அதற்கு வேறு மொழி இல்லை
வேதத்தைத் தந்தவன்
வேறு எதையும் கொடுக்கவில்லை
கா கா வெனவே கரைகிறது
கருத்தினை நீயே புரிந்து கொள்
சுள்ளிகள் பொறுக்கி
சுவர் செய்து
வீடு கட்டி
புள்ளிகள் போடுதே - காகம்
புரிந்து கொள்
அதுதான் உன் ஞானம்
பாட்டன்களை வரச் சொல்லி
பெரும் பட்டிமன்றமே நடத்தச் சொல்லு
காக வரியில் கதையெல்லாம்
சொல்லச் சொல்லு
காகம் சும்மா கரையாது
கத்திக் கத்தி அலையாது
நோக்கம் ஒன்றிருக்கும்
நீ - நோகுமுன்னே தெரிந்து கொள்
(கரையாமல் கரைந்த காகத்திற்கு புரியாமல் புரிந்து கவிதை எழுதிய – பாட்டுப் பாடிய நண்பர்களுக்கு)
17.08.2017