News Update :

Wednesday, August 2, 2017

TamilLetter

அம்பாரை மாவட்ட முன்னாள் எம்.பி சரத் வீரசேகர அச்சுறுத்தல்

அம்பாரை மாவட்ட முன்னாள் எம்.பி சரத் வீரசேகர அச்சுறுத்தல்



நாட்டின் வளங்களை கூறுபோட்டுக் கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள், அடுத்து அமையப்போகும் அரசினால் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பலம் வாய்ந்த நாடுகளுக்கு எமது நாட்டின் அரச வளங்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு வளங்களற்ற நாடாக மாறக்கூடும். அதற்கு முன்னர் இந்த அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமையால் நீதிபதிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இவ்வாறான உடன்படிக்கைகளைச் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக் கொடுக்கும் இவர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின் கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-