News Update :

Saturday, August 5, 2017

TamilLetter

முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தைக்கக்கும் கருணா அம்மான்


முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தைக்கக்கும் கருணா அம்மான்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் ஏகாபத்திய போக்கை முறியடித்து கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும். இதற்கு கிழக்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரளவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சி தலைவர் விநாயகமூர்தி முரளீதரன் ( கருணா அம்மான்) தெரிவித்தார்

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சி தலைமையத்தில் இடம்பெற்றது இதன் போது ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலே கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்தார்

இன்று நல்டலாட்சி அரசு என்பவர்கள் ஒரு தளம்பல் நிலையிலுள்ளது விலைவாசி உயர்வு அபிவிருத்தியில் மந்தகதி, நிர்வாக சீர்கேடு ஊழல் மிகுந்ததுடன் அதிகாரிகள் அச்சமற்றதன்மையோடு செயற்படுகின்றது எனNவு ஒரு மாற்றம் தேவை

மட்டக்களப்ப மாவட்டத்தில் 5 தொழில் நுப்ப பாடசாலைகள் முஸ்லீம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது தமிழ் மக்கள் பகுதிகளில் எதுவுமே இல்லை இதனால் தமிழ் இளைஞர் யவதின் தொழில் நுட்ப கல்வியை பெற முஸ்லீம் பகுதிகளான காத்தன்குடி, ஏறாவூர், ஒட்டுமாவடிக்கு செல்லவேண்டியுள்ளது இந்த நிலமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம்
தமிழ்தேசி கூட்டமைப்பு பாராளுமன்றம் சென்ற அங்கு  அவர்களுக்க வழங்கிய சலுகைகளை பெற்று அவர்களுக்கு வழங்கிய விடுதிகளில் குடித்து எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டுஇங்கு வந்து பொட்டுவைத்து பூசாரி என வேடம் இவர்கள் தமிழ்மக்களிடம் ஒன்றும் வேண்டாம் உரிமை மட்டும் தான் வேண்டும் என பொய்கூறி தமிழ்மக்களை ஏமாற்றி வருகின்றனர்; இவ்வாறன இவர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டாம் என அடித்து துரத்தியது  இப்போது அவர்கள் இல்லை என்றதும் மீண்டும் இன்று வந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்

ஜனாதிபதியின் கொள்கைகளை பாதுகாப்பது தான் ஜனாதிபதி சட்டத்தரணி பதவி இந்த பதவியைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமத்திரனுக்கு ஜ.நாவில் தமிழர்கள் தொடர்பாக கதைப்பதற்கு என்ன உரிமை இருக்கின்றது இவர் எப்படி தமிழ்களுக்காக கதைக்க முடியம் அங்க புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லிவிட்டு பேசாமல் இருக்கின்றர். ஏன் இவர் இந்த சட்டத்தரணிபதவி வேண்டாம் என தெரிவித்திருக்கலாம் தானே ஏன் இவ்வாறு ஏமாற்றுகின்றார்கள்

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பலத்தால் அரசியல் ர{தியாக துரத்தியடிக்கப்பவேண்டும் அப்போது தான் தமிழ்மக்களுக்கு விடிவுகிடைக்கும்
கிழக்கில் முதலமைச்சர் நசீ அகமட்டே அல்லது வேறு எந்த முஸ்லீம் தலவரே கிழக்கில் தலைமை தாங்கமுடியாது ஏன் என்றால் தமிழர் தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது ஏன் அந்த வாய்ப்பை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் ஏற்கனவே தமிழர்கள் தான் விட்டுக் கொடுத்துள்ளோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அளிக்கப்பட்ட வாக்கு தமிழர்களுடைய வாக்கு தமிழ்களுடைய கருத்தை கேட்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பீடம் எதுவித அனுமதியும் இன்றி அந்த பலத்தை முஸ்லீம்களுக்கு கொடுத்துள்ளனர் எனவே அத்தனை வாக்காளர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்துள்ளது இதனை கிழக்கு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் அதேவேளை சிறந்த முறையில் ஒற்றுமையாக இருந்து செயற்படுவோமாயின் நிநச்சயமாக கிழக்கில் தமிழ் முதலமைச்சரை உருவாக்குவோம்

கிழக்கில் 32 சதவீதம் தமிழர்களும் முஸ்லீம்கள் 29 சதவீதமுழ் சிங்களவர்கள் 22 சதவீதமும் இருக்கின்றனர் எனவே தமிழ்களும் சிங்களவர்களும் ஒன்று சேர்ந்து கிழக்கில் தமிழர்கள் ஆட்சியமைக்கும் போது முஸ்லீம் அரசியல் ஏகாபத்தியம் உடைக்கப்படும் அதேவேளை வடக்கில் மன்னார் கொஞ்ச வாக்குகளால் வந்த அமைச்சர் றிசாட்பதியூதீன்  முல்லைத்தீவு, வவுனியா மன்னர்  மாவட்டங்களில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி  அட்டூழியங்கள் செய்வதை தடுக்கவேண்டும்

வட மாகாணத்தில்; தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்குள்ள சிறந்த அரசியல் தலைமைத்துவம் கொடுக்காமல் ஒவ்வொரு நாளும் அங்குள்ள அரசியல் தலமைப் பீடங்களை குழப்பி வருகின்றது அதனால் மாகாண சபை இயங்கமுடியாமல் உள்ளது எனவே வடக்கு மக்கள் ஒரு சிறந்த தலைவர்களை தெரிவு செய்யவேண்டும் அப்போது தான் வடமாகாணத்தையும் காப்பாற்ற முடியும்

தமிழ் மக்கள் அரசியல் விழிப்படையவேண்டும் எங்களுடைய மாகாணங்களை நாங்களே ஆட்சி செய்து கொண்டு வருகின்ற மத்திய அரசாங்கத்தில் பலமான அமைச்சர்களை உருவாக்கவேண்டும் அப்பொழுது தான் மாகாண சபைக்கான அதிகாரங்களை நிறைவேற்றமுடியும்

எமது கட்சிக்கு சிங்கள மக்களினதும் சிங்களமதத் தலைவர்களதும் ஆதரவு வெளிப்படையாக உள்ளது அந்த சக்தியை கொண்டு நல்ல ஒரு தலைவருக்கு கீழ் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள மக்களும் சிங்களமதத் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளுவர்கள் அப்பொழுதுதான் வடகிழக்கல் தமிழர்களினது பிரதிநிதித்துவம் முதன்மையாக இருக்கும்

மட்டக்களப்பில் இன்று முஸ்லீம் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தை எதிர்த்து கருத்துக்கூற முடியாமல்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசில்வாதிகள்;  அவர்களுக்குள் அடங்கி பெட்டிப்பாம்பாக இருக்கின்றனர் ஆனால் இவ்வாறு துணிந்த கருத்துக்களை கூறக்கூடியவர்கள் நாங்கள் எனவே அரசியல் கட்சிகள் எங்களிடம் வந்து இணைந்துகொள்ளவும் அவர்களை நட்பு ரீதியாக வரவேற்கின்றோம்

புனர்வாழ்வு அழிpக்கப்பட்ட முன்னாள் போராளிகளை அரசியல் கைதியாக கைது செயயமுடியாது அவர்களுக்கு சட்டரீதியாக பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது இது அவர்களுக்க சட்டரீதியான அங்கீகாரம் இதன் பிற்பாடு அரசியல் கைதியாக கைது செய்யப்படுவது அதிகாரம் இல்லை அவ்வாறு நடக்குமாயின் அது தமிழ் அரசியல் வாதிகளின் மந்தப்போக்குத்தான் காரணம்
அதேவேளை அண்மையில் முன்னாள் போரளி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது அது ஒரு எழுந்தமானத்திலான தீர்வு வழங்கப்பட்டுள்ளது அவர் தலைமைப் பீடத்தின் அழுத்தம் காரணமாக செய்திருக்கலாம் ஆனால் அவர் முடிவெடுத்து செய்திருப்பதாக தண்டனை வழங்கியது மனவேதனையளிக்கின்றது இதனை கண்டிக்கின்றோம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்கொலை தாக்குதலுக்கு முயற்சி செய்த போராளியை அவர் மன்னித்து விடும்போது ஒரு வீடிலே உள்ள ஒருபோராளியை போராட்டத்திற்கு இணைத்தார் என்று ஆயுள் தண்டனை விதிப்பது இந்த நாட்டிலே என்ன நியாயம்? எமது கட்சி அதிகாரத்துக்கு வரும்போது முன்னாள் போராளிகளுக்கு பாதுகாப்பை வழங்குவோம் ஏன் என்றால் அதற்கு எனக்கு உரிமை இருக்கின்றது என்றார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-