News Update :

Sunday, August 13, 2017

TamilLetter

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக போராட்டம்



அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக போராட்டம்



அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக அக்கரைப்பற்று அல் – பதுார் வித்தியாலய கல்வி சமூகம் இன்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலை அிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்த இப் போராட்டத்தில் பெரும் என்னிக்கையிலான பெற்றோர்களும் மாணவர்களும்
பொது மக்களும் கலந்து கொண்டனர்.


அக்கரைப்பற்று பதுார் வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பாடங்களை நடாத்த முடியாமல் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பல வருடங்களாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகின்றார்.

எனவே எமது பாடசாலையில் நிலவும் அசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே இப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என அதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-