News Update :

Sunday, August 13, 2017

TamilLetter

கிழக்கில் இன்று மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும்


 



நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு இடியுடன்கூடிய மழை அல்லது புயல்காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதே நேரம் இன்று காலை இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி பாதிப்பு எதுவும் ஸ்ரீலங்காவில் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-