News Update :

Friday, August 18, 2017

TamilLetter

அதாஉல்லா தடுத்தாலும் கல்முனையில் பிராந்திய நீர்வடிகாலமைப்பு காரியாலயம் அமையும் - ஏ.எல்.தவம்

அதாஉல்லா தடுத்தாலும் கல்முனையில் பிராந்திய நீர்வடிகாலமைப்பு காரியாலயம் அமையும் - ஏ.எல்.தவம்

 ஏ.எல்.றமீஸ்

அம்பாரைக்கு செல்லும் மக்களை இலகுபடுத்துவதற்காக சுமார் 5ஆயிரம் இணைப்புகளோடு அக்கரைப்பற்றில் ஆரம்பிக்கப்பட்ட நீர்வடிகாலமைப்பு சபையின் பிராந்திய காரியாலயம் இன்று 75ஆயிரம் இணைப்புகளைக் கொண்டுள்ளது.எப்படி அக்கரைப்பற்று மக்கள் அம்பாரைக்கு போவது சிரமமென கருதினமோ அதே  போன்று கல்முனை,சாய்ந்தமருது,மருதமுனை மக்கள் அக்கரைப்பற்றுக்கு வருவது  சிரமமென கருதுகிறோம். அதனால்தான்  அம் மக்களின் நன்மை கருதி கல்முனையிலும் ஒரு பிராந்திய காரியாலயத்தை  அமைக்கின்றோம் இதில்  என்ன தவறு உள்ளது என கேள்வியெழுப்பினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ;.

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் நேற்றிரவு(18) இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் தவம் தொடர்ந்து உரையாற்றுகையில்
பெருந்தலைவர் அஷ்ரபின் வழியைப் பின்பற்றுகிறோம் என கூறும் அதாஉல்லா பெருந்தலைவர் அஷ்ரப் பிறந்த மண்ணில் ஒரு காரியாலயத்தை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களை தூண்டிவிடுவதன் மூலம் அவரின் அசிங்கமான அரசியலை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.

கல்முனையில் அமைக்கப்படவிருக்கின்ற மற்றுமொறு பிராந்திய காரியாலயத்தினால் அக்கரைப்பற்றுக்கு எந்தவித பாதிப்புகளுமே இல்லை அப்படி என்ன பாதிப்பு என்று கேட்டால் அது தெரியாது கல்முனையில் அமையக் கூடாது என அதாஉல்லா பதில் சொல்கின்றனர்.

மஹிந்த அரசில் அதிகாரத்தில் இருந்த போது நமது சகோதர கிராமங்களை பிரதேசவாத நஞ்சை விதைத்து அக்கரைப்பற்றை தனிமைப்படுத்தி அப்பாவி பொது மக்களை பழிக்கிடாவாக்கினார்.அதே ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அப்போது அக்கரைப்பற்றில் மர்ஹூம் உதுமாலெப்பை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக நீரோட்டத்திற்காக அப் பாராளுமன்ற உறுப்பினரை ஒதுக்கி வைத்துவிட்டு பெருந் தலைவர் அஷ்ரபோடு இணைந்த வரலாறு அக்கரைப்பற்று மக்களைச் சாரும்.அப்படிப்பட்ட மக்கள் வாழும் மண்ணில் தனது தனிப்பட்ட குடும்ப அதிகார வேட்கைக்காக முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினை வாதத்தை விதைப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார் தவம். 

அக்கரைப்பற்றில் அதாஉல்லாவுக்காக அளிக்கப்படும் சுமார் 8 ஆயிரம் வாக்குகளை வைத்துக் கொண்டு எப்படி அவரால் பாராளுமன்றம் செல்ல முடியும் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியுமா? என சவால் விட்டார்.

பிரதேச வாதத்தை கக்கும் நீங்கள் கல்முனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு சென்று தனக்கு வாக்களியுங்கள் என்று அம் மக்களைப் பார்த்து கேட்கின்றீர்களே உங்களுக்கு நாக்கூசவில்லையா? ஏன்றார் தவம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-