News Update :

Tuesday, August 1, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கோரிக்கை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கோரிக்கை



தனித்துவ முஸ்லிம் அடையாள அரசியலுக்காக தனது இன்னுயிரை முதன்முதலில் அர்ப்பணித்த தியாகி முன்னாள் வட - கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எனது ஆங்கில ஆசிரியருமான மர்ஹூம் அலி உதுமான் சேரின் நினைவு நாள் இன்று. அல்லாஹ் அவருடைய கபூரை விசாலமாக்கி சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்கி வைப்பானாக. அவருக்கு ஜன்னத்துல் பிதௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக. அவருடைய தாய் தந்தையர் மீதும் அல்லாஹ் கருணையும் அன்பும் காட்டுவானாக. அவருடைய குடும்பத்தின் மீது அவருடைய குடும்பத்தின் மீது அல்லாஹ் ரஹ்மத்துச் செய்வானாக.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக இயக்கத்தை அக்கரைப்பற்றில் வேரூன்றச் செய்து, தமிழ் ஆயுதக் குழுக்களால் அக்கரைப்பற்றிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை தனது உயிர் கொண்டு முகம் கொடுத்த பெரும் தியாகி அவர். இன்றைய நாளில் (1989, August ௦1) ENDLF இயக்கத்தினரால் அவரது வீட்டு வாசலில் வைத்து அநியாயமாகத் திட்டமிட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எங்கள் பள்ளிக்கூடப் பருவத்தில் எனது ஆங்கில ஆசிரியராகவும். பாடசாலையின் மாணவர் ஒழுக்கத்திற்குப் பொறுப்பானவராகவும் இருந்தார். சிறந்த கற்பித்தலை செய்த அதேநேரம், மாணவர் மத்தியில் ஒழுக்கத்தைக் கொண்டு வருவதில் இறுக்கமுடையவராக்கவுமிருந்து, சிறந்த சமூகத்தை உருவாக்கினார்.

இன்று ஆயிரக்கணக்கான அவருடைய மாணவர்களினதும், மக்களினதும் இதயங்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றன. நாமும் அவருக்காகப் பிரார்த்தித்து அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-