News Update :

Tuesday, August 1, 2017

TamilLetter

அதாஉல்லாவை வன்னிக்கு போகச் சொல்லும் வட்டமடு விவசாயின் கதை கேளுங்க

அதாஉல்லாவை வன்னிக்கு போகச் சொல்லும் வட்டமடு விவசாயின் கதை கேளுங்க


வட்டமடுவ நாங்க பாக்கம்; வழக்கெண்டாலும் நாங்க பேசுறம் - வன்னிக்கு போ காக்கா; அங்க வடிவான பொண்ணிருக்கு
என்ர ‘’காக்கா’’

ஏழு வருஷம் அம்பாறக் கச்சேரில அபிவிருத்தி அக்கிராசர்
வர்த்தமானி ஒண்டு வாற கத கண்டு
வருத்தத்தோட ஓடி வழுக்கி உழுந்து

‘’காக்கா காக்கா கத கேட்டியா
வட்டமடுக்கு வம்பு வரும்
வர்த்தமானி இத பார்த்தாயா’’ எண்டா
‘’நான்தான் இருக்கனே நம்பி நீ போ
நாளைக்கு பார்க்கிறன்
நான் என்னெண்டு கேக்கிறன்’’
எண்டா காக்கா
எண்டதுதான்
வட்டமடுவோடு
வடிவான நிலமெல்லாம்
வளைச்சிபோட்டு
வனமாகக் கையொப்பமிட்டு
கொடுத்தாரே காக்கா

கொமிசன் கேட்டிருந்தா
கொல்லையால தந்திருப்போம்
அள்ளிக்குப் போக விட்டேயே காக்கா
அல்லாஹ் இருக்கான் பாத்துக்குவான்
ஏழு வருசத்தில
நீ எழுந்திருந்து கேட்டதில்ல
பார்க்க வந்தா படுக்கார் என்று செல்லி அனுப்பி
பதற விட்டாயே
இப்போ பதறாகப் போனாயே
எல்லாமே போன பின்ன
என்னத்த சொல்ற நீ
காக்கோ ஒண்ட களிசறையல் சில
கடுமையாத்தான் கத்துதுகள்
தவத்துக்கு ஏசி தரங்கெட்டு போகுதுகள்

சக்கிலியன் ‘’சக்தி’’ யின்
சத்தி எல்லாம் தின்னுதுகள்
பொத்திக்கு இருக்க சொல்லு காக்கா
ஒண்ட பொறம்போக்கு அரசியல பார் காக்கா
வட்டமடுவ நாங்க பாக்கம்
வழக்கெண்டாலும் நாங்க பேசுறம்
வன்னிக்கு போ காக்கா
அங்க வடிவான பொண்ணிருக்கு
மறுமை இருக்கு காக்கா
மஹ்சரில சந்திப்போம்
அந்த ‘’பாலத்தில்’’ அமானிதத்த
வேண்டி நிற்பம்
கடக்க விட மாட்டம் காக்கா
கணக்க நீ தீர்க்கல எண்டு
ஆக்கம்:-
எம்.ஐ. முஹமட் அதீர்
வட்டமடு விவசாயி

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-