News Update :

Thursday, August 3, 2017

TamilLetter

துபாயின் 79 மாடி கட்டடம் தீப்பற்றியது



துபாயில் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘டார்ச் டவர்’ கட்டடத்தில் இன்று அதிகாலை பயங்கரத் தீவிபத்து நடந்ததைத் தொடர்ந்து இந்தக் கட்டடத்தில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 
நகரின் முக்கிய பகுதியான மரினா மாவட்டத்தில் இந்த 79 மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. இந்தத் தீயின் காரணமாக, கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து எரிந்து சிதைந்த பகுதிகள் பல கீழே வந்து விழுந்த வண்ணம் இருந்ததால், இப்பகுதியை மக்கள் நெருங்கவிடாமல் தடுக்கப்பட்டனர்.
துபாயின் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. 
இந்தக் கட்டடத்தில் இத்தகைய தீ விபத்து நடப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டில் ‘டார்ச் டவர்’ கட்டடத்தில் இதே போன்ற தீ விபத்து நடந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-