நடிகர் அஜித் நடிப்பில் இன்று உலகமெங்கும் விவேகம் படம் வெளியாகும் நிலையில், அஜித்தின் உருவப்படத்தை இட்லியில் பதித்து சாதனைப் படைத்துள்ளது
சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம்.
தனக்குப் பிடித்த நடிகரின் படம்
வெளியானால், பொதுவாக பெரிய பதாகைகளும் அலங்காரங்களும் தான் வைக்கப்படும்.
ஆனால் சென்னையில் உள்ள சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் வட சென்னை
அஜித் ரசிகர்களும் இணைந்து 57 கிலோ எடையில் இட்லியைத் தயாரித்து சாதனைப்
படைத்துள்ளனர்.
அது என்ன 57 கிலோ? இன்று வெளியாகும்
விவேகம் படம் அஜித்தின் 57வது படம் என்பதால், அதனைக் குறிக்கும் வகையில் 57
கிலோ இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இட்லியை சென்னையில் உள்ள பாரத்
திரையரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே இட்லியில் ஒரு நடிகரின் உருவம்
பதிவு செய்வது இது தான் முதல் முறை என்றும் இதற்கு
விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பதைக் காட்ட
இன்னும் என்ன என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை. அப்போ விஜய்க்கு....?