பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மறுபிரவேசம் செய்தால் அவருக்கு அதிகச் சம்பளம் கொடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய
காரணத்தால் அந்த நிகழ்ச்சி தனது மவுசை இழந்து வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களின் மனதை
கவர்ந்தவர் ஓவியா.
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும்
திரும்புவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், அவர்
திரும்பவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இந்நிலையில், முன்னதாக நடிகை ஓவியாவுக்கு
வாரத்திற்கு 3 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர் நிகழ்ச்சியில்
மறுபிரவேசம் செய்தால், ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க
முடிவு செய்துள்ளது பிக்பாஸ் குழு என்றொரு தகவல் கசிந்துள்ளது.