News Update :

Sunday, August 13, 2017

TamilLetter

கல்குடாத் தொகுதியில் 450 மில்லியனின் அபிவிருத்தி திட்டங்கள்




நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் கல்குடா தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 இதில் அதிகளாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் pப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மையில், அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.என்.முபீன், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை தலைவர் கே.பி.எஸ்.ஹமீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் கணக்காளர் எச்.எம்.எம்.றியாழின் வேண்டுகோளின் பேரில் கல்குடா பிரதேசத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கு நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக நாறூற்றி ஐம்பது மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

கோறளைப்பற்று மத்தி பிரதேச உள்ளக கொங்கிரீற் வீதிகளுக்கு ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாவும், ஓட்டமாவடி சுற்று வட்டத்திலிருந்து வாழைச்சேனை ஜூம்ஆ பள்ளி வாயல் வரையான வீதியை கார்பெட் வீதியாக மாற்றுவதற்கு ஐந்து கோடியும், மாஞ்சோலை - மீராவோடை வெள்ளத் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு ஒரு கோடியும், காவத்தமுனை சிறுவர் பூங்காவுக்கு ஐம்பது இலட்சமும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்குடா தொகுதியில் முதலாம் கட்டமான எழுபத்தி ஒன்பது மில்லியன் ரூபா செலவில் 54 கிலோ மீற்றர் குடிநீர் வழங்களுக்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-