News Update :

Sunday, August 6, 2017

TamilLetter

போதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது!


கடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலாளர் உட்பட 4 பேரை தாம் கைது செய்துள்ளததாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப் பொருள்களில் 3 ஆயிரம் மில்லி கிராம் கொக்கேய்ன், 4 ஆயிரத்து 500 மில்லி கிராம் பில் என்ற போதைப் பொருள், 9 ஆயிரத்து 740 மில்லி கிராம் ஹைஸ் போதைப் பொருள், 18 வெளிநாட்டு மதுபானங்கள், 400 சட்டவிரோத சிகரட்டுக்கள் என்பவற்றை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் அவரது வங்கி அட்டையும் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-