News Update :

Thursday, August 31, 2017

TamilLetter

அடுக்குமாடி இடிந்து விழுந்து 32 பேர் பலி!



அடுக்குமாடி இடிந்து விழுந்து 32 பேர் பலி!

கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அதில் சிக்கி 32 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெண்டி பஜாரில் உள்ள 117 ஆண்டு பழமை வாய்ந்த 5 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பையில் மழை வெளுத்து வாங்கி வெள்ளக்காடான இரண்டு நாட்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 

இடிந்து விழுந்த 5 அடுக்குமாடி கட்டிடத்தில் 9 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. மேலும் அந்த கட்டிடத்தில் ஒரு பாலர் பள்ளியும் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழைக்கு நடுவே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் 11 பேர் மட்டுமே பலியானதாக கூறப்பட்டது. ஆனால், இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்து 32 ஆக அறிவிக்கப்பட்டது.

கட்டிச விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-