News Update :

Tuesday, August 15, 2017

TamilLetter

கோர நிலச்சரிவு: தூங்கிக் கொண்டிருந்த 312 பேர் மண்ணில் புதைந்தனர்!


கோர நிலச்சரிவு: தூங்கிக் கொண்டிருந்த 312 பேர் மண்ணில் புதைந்தனர்!



சியாரா லியோன் நாட்டில் பெய்து வரும் கடுமையான மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியாரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையைத் தொடர்ந்து தலைநகரான ஃபிரிடவுனுக்கு அருகில் உள்ள ரீஜெண்ட் என்ற பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. மக்கள் தூங்கிய நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டதும் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாக உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் விரைவாக ஈடுபட்டு பலரைக் காப்பாற்றி   உள்ளனர். 
மீட்புப் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், பெரும் சேதத்தைத் தவிர்க்க அனைத்து தன்னார்வ அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும் என சியரா லியோன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரியான கேண்டி ரோஜர் கோரிக்கை விடுத்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-