News Update :

Friday, August 25, 2017

TamilLetter

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் பிரதி தவிசாளர்


சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஓரே தினத்தில் நடத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலைமைப்பு 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் முன்வைத்த தனி நபர் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் விவாதிக்கப்படவுள்ளது.

குறித்த விவாதம் எதிர்வரும் செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு 20 ஆவது திருத்தம் தொடர்பான சட்ட மூல வரைபு கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் முன்வைத்துள்ள தனி நபர் பிரேரணையில் மாகாண சபையொன்றின் பதவிக் காலம் முடிவடைந்தால் உரிய நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கிழக்கு மாகாண சபையின் 82 ஆவது அமர்வு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள அந்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஓரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பு 20 ஆவது திருத்தமும் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தமும் கொண்டு வர மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான சட்ட மூலம் வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியமைப்பு 20 ஆவது திருத்தத்தில் குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை ஓரே நாளில் நடத்தும் வகையில் அதனை கலைக்கும் திகதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் மாகாண சபைகளை வைத்துக்கொள்ளவதற்கான முயற்ச்சியாகவே இதனை கருதவேண்டும்.

உத்தேச திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அடுத்த மாதம் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட 3 சபைகளின் பதவிக் காலம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

கிழக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை 5 வருடங்களாகும். மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக சபையின் பதவிக் காலம் நீடிப்பு என்பது ஜனநாயக மரபு அல்ல.
எனவே உத்தேச திருத்தங்களை ஜனநாயக விரோதம் செயலாகும் என சபை கருத வேண்டும் உத்தேச திருத்தங்களை கைவிட்டு கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் உரிய நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் கிழக்கு மாகாண சபை அரசை
கோருகின்றது என அந்த பிரேரனை தெரிவிக்கின்றது.
இதேவேளை இந்த திருத்தத்திற்கு மத்திய அரசு அனைத்து மாகாண சபைகளின் சம்மதத்தையும் பெறுவதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் வட மத்திய மாகாணத்தில் ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தின் பதவிக் காலம் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இந்த திருத்தத்தை நிராகரித்துள்ள ஊவா மாகாண சபை இதற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதன் பதவிக் காலம் 2019 செப்டம்பர் வரை உள்ளது.

கிழக்கு மாகாண சபையில் இது பற்றி விவாதிப்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு அமர்வு நடைபெவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
கி
ழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் அடுத்த மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடையவிருக்கின்றது.

தற்போது முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு 20 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற 3 இல் 2 என பெருன்பான்மை தேவை என கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் 8 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மாகாண சபைகளையும் கலைக்கும் திகதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் வரை கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலமும் நீடிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-