News Update :

Friday, August 18, 2017

TamilLetter

18வயது இளைஞர் கிணறு ஒன்றுக்குள் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.





18வயது இளைஞர் கிணறு ஒன்றுக்குள் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



 அரை ஏக்கர் பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) காணாமல் போன இளைஞன், நேற்று (18) மாலை கிணறு ஒன்றுக்குள் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா,  அரை ஏக்கர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதான மாலிக் முபாரிஸ் என்ற இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்த இளைஞன், தான் சாரதியாக தொழில் புரிந்து வந்த முதலாளியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-