News Update :

Tuesday, August 1, 2017

TamilLetter

1700 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டம்பரில் ஆசிரிய நியமனங்கள்


கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செப்டம்பரில் 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரிடம் கலந்துரையாடியுள்ளேன். கிழக்கு மாகாணம் பலகோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி, மாகாண சபையின் தவிசாளர் ஏ.பி.சந்திரதாச கலப்பதி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, ஆளுநரின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-