மஹிந்த ஆதரவு 10 உறுப்பினர்களை சிறைக்கு அனுப்பவே புதிய நீதியமைச்சு பொறுப்பேற்றுள்ளதாகவும், அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விமல் தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுஎதரிணியால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 10 பேரில் உள்ளடக்கப்பட்டுள்ள தலதா அம்மையார் தற்போது நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறித்த அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்காது என்றும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.