News Update :

Wednesday, July 26, 2017

TamilLetter

காரின் மீது மோதிய டேனி ராஜ் - திரிவிக்ரம் அதிர்ச்சி தந்த VIDEO காட்சி!


 விமான நிலையத்தில் வேலை செய்யும் இரு பாதுகாவலர்கள், தங்கள் இரவு நேரப் பணியை முடித்துவிட்டு கோஸ்வே வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மோதி விபத்துக்கு உள்ளாயினர். 
காலை 10.30 மணியளவில் 24 வயதான டேனி ராஜ் முனியப்பன் மற்றும் 21 வயதான ஆர்.எல்.திரிவிக்ரம் ஆகிய இருவரும் வுட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் லெண்டோர் அவென்யூ வழிக்கு முன்னர் அமைந்திருக்கும் செலேடார் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த காரின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேனி ராஜ் மோட்டார் சைக்கிளை ஒட்டியதாகவும் திரிவிக்ரம் பின்னால் அமர்ந்து வந்ததாகவும் தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் பரவலாகி வரும் வீடியோவில், மோட்டார் சைக்கிள் காரின் பின்புறம் மோதி திருவிக்ரம் காரின் கீழே விழும் காட்சியும் மோட்டார் ஓட்டியான டேனி ராஜ், பல மீட்டர் தூரத்தில் தூக்கி எறியப்பட்டு கீழே விழும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. 
பலத்த காயங்களுக்கு ஆளான இருவரும் சிகிச்சைக்காக கூ தேக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று டேனிராஜின் தந்தை முனியப்பன் (வயது 55) தெரிவித்தார். இந்த இரு நண்பர்களும் ஜொகூர் பாருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
“எப்பொழுதும் இது போன்ற விபத்து காணொளிகளைப் பார்க்கும் போது எந்தவித உணர்ச்சியும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால், என் மகன் விபத்துக்குள்ளான அந்த காணொளியைப் பார்க்கும் போது என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மோட்டார் பந்தயங்களில் ஈடுபடும் பழக்கங்கள் என் மகனுக்கு இல்லை. என் மகனை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று முனியப்பன் வேதனையுடன் குறிப்பிட்டார். 
முனியப்பனுக்கு சிறுநீர்ப் பையில் காயம் ஏற்பட்டுள்ளது. இடுப்பு, கை  கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அதிக அளவில்இரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சுய நினைவற்ற நிலையில்  இருக்கிறார். திரிவிக்ரமிற்கு கால் மட்டும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு பேச முடியாத நிலையில் உள்ளார். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்களாலான உதவியை பாதிக்கப்பட்ட இருவருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நிச்சயமாக செய்வோம் என்று அவர்கள் பணிபுரியும்  'செர்டீஸ் சிஸ்கோ' நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் பாதுகாப்புப் பிரிவின் தலைவருமாகிய பேனி லிம் தெரிவித்தார். இந்த விபத்து குறித்த விசாரணையை போலீஸ் மேற்கொண்டு வருகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-