News Update :

Monday, July 31, 2017

TamilLetter

தமிழ்க் கூட்டமைப்பு எமக்குத் தேவையில்லை; UNP


தமிழ்க் கூட்டமைப்பு எமக்குத் தேவையில்லை; UNP

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து பிரிந்துசென்றால் கட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியை நாடவேண்டிய அவசியம் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இரண்டு வெசாக் மற்றும் போயா தினங்களில் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்துக்காட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணியினர் கூறிய போதிலும் அது இதுவரை நடக்கவில்லை என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம், முடிந்தால் அரசை கவிழ்த்துக்காட்டுமாறும் சவால் விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக ஸ்ரீகொத்தவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் உரையாற்றினார்.
“தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தேவை எங்களுக்கு கிடையாது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை முக்கியமல்ல, அதைப் பார்க்கிலும் தேசிய அரசாங்கத்தின் சிந்தனையை பாதுகாப்பதே அவசியமாகும்.
இதனை மேலும் தொடர்வதா இல்லையா என்பது இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களது தீர்மானம் என்பதுபோல கட்சிகளினது அர்ப்பணிப்புமாகும்.
தற்போது சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்க்ள கூறுவது போல, ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் அவர்களது ஸ்திரமான நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் அதுகுறித்து எங்களுக்கும் உறுதியாக அறிவிப்பை விடுக்கமுடியும்.
அதுவரை தற்போது செயற்படுவது போல தொடர்ந்து இருக்கமுடியும். இரண்டு வெசாக் போயா தினங்களில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக சிலர் கூறினார்கள். அவர்கள் நிர்யணித்த தினங்கள் நிறைவடைந்துவிட்டன.
அதனைக் கூறிய அந்த நபர், குறைந்தபட்சம் வடமேல் மாகாண சபையின் அவரது தவிசாளரைக்கூட காப்பாற்றமுடியாமற் போய்விட்டது.
வேண்டுமென்றால் மேலும் வெசாக், போயா தினங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும். இயலுமானால் அரசாங்கத்தைக் கவிழ்த்துக்காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்” என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-