News Update :

Tuesday, July 11, 2017

TamilLetter

அட்டாளைச்சேனையை கைவிட்ட ஹஸனலியின் முஸ்லிம் கூட்டமைப்பு


அட்டாளைச்சேனையை கைவிட்ட ஹஸனலியின் முஸ்லிம் கூட்டமைப்பு


எஸ்.எச்.பஸ்லி முகம்மட்

பெரும் பரபரப்புடன் அரங்கேற்றப்பட்ட ஹஸனலியின் உண்மைக்கான பயணம் காற்றுப் போன பலூன் போல் ஆகிவிட்டது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துத்தான் முஸ்லிம் கூட்டமைப்பை உறுவாக்குவோம் எனவே முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடு இணைய வேண்டுமென கூறும் ஹஸனலியின் கூற்று முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிழையானவர் என மேடை போட்டு கூச்சல் போடும் ஹஸனலி தரப்பினர் பிழையான ரவூப் ஹக்கீமுக்கு இணைய அழைப்பு விடுப்பதன் மூலம் ;ஹஸனலி ஹக்கீம் மீது அபாண்டம் சுமத்துகிறார் என்பது மிகவும் அழகாக தெளிவாகின்றது.

அத்தோடு முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் மிகவும் மோசமானவர் அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென கச்சை கட்டிக் கொண்டு போர்க் கொடி தூக்கிய முன்னாள் தவிசாளர் அன்ஸில் எப்படி அதே பஸீர் சேகு தாவூத்தை தமது கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றார் என்பதில் பல நூறு கேள்விகள் தேங்கிக் கிடக்கின்றன.

முதலமைச்சர் ஹபீஸ் நஸீரின் பல மோசமான சீடிக்கள் எம்மிடம் உள்ளது என்று அடிக்கடி மக்களை பேக்காட்டுவது பஸீரின் சிறுபிள்ளைத்தனம் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்,பஸிரின் கற்பனைச் சீடி நிஜத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எல்லோருடைய ஆசையும்தான்.

இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் தெரியப்படுத்தி ஒவ்வொறு பிரதேசங்களிலும் கூட்டங்களை ; நடாத்த புறப்பட்டவர்கள் இடை நடுவில் ஒதுங்கியதன் மூலம் இவர்களிடமிருந்த சரக்கு தீர்ந்து விட்டது போல் அல்லவா உள்ளது.

சும்மா வந்த அமைச்சர் ரிஷாட் பதியூதினையே விரட்டியடித்தவர்கள் அட்டாளைச்சேனை மக்கள் அப்படியிருக்கும் போது முஸ்லிம் கூட்டமைப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டாளைச்சேனையில் கூட்டம் நடாத்தினால் எப்படியிருக்கும் அத்தோடு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸிரின் சொந்த பிரதேசமும் அட்டாளைச்சேனைதானே,



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-