News Update :

Wednesday, July 5, 2017

TamilLetter

பணத்திற்காக புலிகளுக்கு இரையாக்கப்படும் முதியவர்கள்!


உத்தரப்பிரதேச மாநிலத்தில்  அரசாங்கம் தரும் நிவாரணத் தொகைக்காக தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை குடும்பத்தினரே புலிக்கு இறையாக அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பிலிப்பிட் புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் புலிகள் தாக்கி கிராம மக்கள் இறந்து வருவது  அணமைய காலங்களில் அதிகரித்து வந்தது.
இதனையடுத்து வன உயிர் குற்றத்தடுப்பு ஆணையம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இறந்தவர்கள் அனைவரும் முதியவர்கள் என்பது தெரியவந்த நிலையில், அரசு வழங்கும் நிவாரணத் தொகைக்காக கிராம மக்களே, தங்களது குடும்பத்தில் இருக்கும் முதியவர்களை காட்டுக்கு அனுப்பி புலிகளுக்கு இரையாக்கும் செயல் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
மேலும் முதியவர்களும் தங்களது வருங்கால சந்ததியினருக்காக தாங்களே முன்வந்து புலிக்கு இரையாகச் செல்வதும் தெரியவந்துள்ளது. இதுதவிர வீட்டில் இறந்த முதியவர்களின் உடலை காட்டிற்கு கொண்டு சென்று கிடத்தி புலிகள் தாக்கி இறந்ததாக கிராமவாசிகள் நாடகமாடும் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-