News Update :

Saturday, July 22, 2017

TamilLetter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அதிர்ச்சி தரும் புதிய திட்டம்

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்தவின் அதிர்ச்சி தரும் புதிய திட்டம்


இன்னும் இரண்டு பௌர்ணமி தினங்கள் முடிந்த பின்னர் தேசிய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்­தி­ருக்­கின்­றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று எம்மோடு இணைய உள்ளது.
எமது அணியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள் மூன்று பேருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். மிக விரைவில் அவர்கள் எம்மோடு இணைவார்கள். குறிப்பாக 17 பேர் என்னோடு இணைவார்கள். இதற்கும் அதிகமானவர்களும் எம்மோடு இணைய வாய்ப்பு உள்ளது.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளம் உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தில் திருப்­தி­யுடன் இல்லை. இதனால் ஐக்­கியப் தேசியக் கட்­சியின் அரை­வாசி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள்.
புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்துக்கு எதிராக செயற்படுவதே எமது நோக்கமாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தை ஒரு­போதும் நாம் ஏற்­று­கொள்ள மாட்டோம். இப்­போது கொண்­டு­வர முயற்­சிக்கும் புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக நாட்டின் ஐக்­கியம், நிறை­வேற்று அதி­கார முறைமை உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன.
எமது அணியில், ஒரு அணி அர­சியல் அமைப்பு சபையில் இருந்­து­கொண்டும் ஒரு அணி வெளி­யே­றியும் புதிய அர­சியல் அமைப்பை தடுப்­பதே எமது இலக்கு எனவும் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-