News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் உண்மை முகம்



ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் உண்மை முகம்


முகம்மட் சிப்னாஸ் - அட்டாளைச்சேனை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தில் மர்ஹூம் அஷ்ரபை எப்படி பிரிக்க முடியாதோ அதே போலவே அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.

இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு சாதாரண அமைப்பை உறுவாக்குவதே கடினமான காரியமாகவே பார்க்கபபடுகின்றது. அந்த காலத்தில் எந்தவித அடிப்படை வசதியிமில்லாமல் சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்கான பேரியக்கத்தை தலைவர் அஷ்ரப்போடு தன்னந் தனியாக நின்று உறுவாக்கியதன் மூலம் வரலாறு மறக்க முடியாத நபராவார் எஸ்.எம்.ஏ.கபுர் 

எந்தவித தியாகங்களையும் செய்யாமல் பதவிகளுக்காக கட்சிமாறும் இன்றைய அரசியல் வாதிகளுக்கு மத்தியில் எந்தவித எதிர்பார்ப்பும் அற்று முப்பது வருடமாக தான் வளர்த்த இயக்கத்திற்காக இன்னும் நம்பிக்கையுடன் அந்த கட்சியை ஆசீர்வதிப்பது எல்லோராலும் முடியாத ஒன்றாகும்.

ஒரு மாபெரும் இயக்கத்தின் முதலாவதும் மற்றும் ஸ்தாபக செயலாளராக தன்னை நிலை நிறுத்திய சட்டத்தரணி கபூரின் பக்குவமான பன்பான மெத்தனப் போக்கு சுயநல வாதிகளின் பார்வைக்கு அநாகரிகமான செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. 

எப்போதுமே தன் நலனைவிட கட்சியின் வளர்ச்சியே முக்கியம் என கருதியே சட்டத்தரணி கபூர் தகுதி தராதரங்களுக்கு அப்பால் மற்றவர்களின் வளர்ச்சியில் ஏணியாக நிற்றதே அதிகம்:

கொழும்பில் நடக்கும் கட்சியின் உயர்பீட கூட்டம் தொடக்கம் சாதாரண நிகழ்வுகள் வரை இயக்கத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் தனது சொந்தப் பணத்தையும்,நேரத்தையும் செலவளித்து தன்னை ஈடுபடுத்தியதன் மூலம் அவரின் சுயநலமற்ற தன்மையை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

எஸ்.எம்.ஏ.கபூர் ஒரு சட்டத்தரணியாக,ஒரு கவிஞனாக,ஒரு எழுத்தாளராக.ஏன் மும்மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருப்பதே அட்டாளைச்சேனையின் அடையாளமாக மாறியுள்ளது.

தேசிய அரசியலில் தன் இனத்தின் குரலாக இருப்பதற்கு தேவையான தகுதி சட்டத்தரணி கபூருக்கு நிறையவேயுள்ளது.இந்த உண்மை கட்சிக்கு மட்டுமல்ல அட்டாளைச்சேனை மக்களுக்கே புரியவில்லை என்பது பேரரிஞர் அண்ணா காலத்தை நினைவு கூறுகின்றது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-